சிறுமியிடம் சில்மிஷம்:வாலிபர் மீது வழக்கு

10-08-2019 12:05 AM

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை தொடர்ந்து அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி மேலதத்தையார் குளத்தை சேர்ந்த சிறுமி, பெற்றோர் உடல்நலம் சரியில்லாததால் நாகர்கோவிலில் ஆவின் பாலகத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவரது தோழியை பார்க்க அண்ணா பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்ற சிறுமியிடம்  வாலிபர் ஒருவர் சைகை காட்டி பின்னர் பெண்ணின் அருகே வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர்  அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார், இது பற்றி அந்த பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து கோட்டார் போலீசார் பெரும்சிலம்பை சேர்ந்த மரிய அந்தோணி மகன் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.