கார் மீது மினி லாரி மோதி விபத்து

10-08-2019 12:05 AM

தக்கலை,:

தக்கலை அருகே கார் மீது மினி லாரி பின்னால் மோதியதில் அருட்பணியாளர் மற்றும் பாதசாரிகள் உயிர் தப்பினர்.

திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ராஜேந்திரன்.  முளகுமூடு வட்டார குருகுல முதல்வரான இவர் நேற்று சுமார் 12 மணியளவில் முளகுமூட்டிலிருந்து தனது காரில் தக்கலைக்கு வந்து கொண்டிருந்தார். கார் மேட்டுக்கடையருகேயுள்ள டி.எம்.பி. அருகே வரும்போது பின்னால் மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த மினி லாரி காரின் பின்னால் திடீரென மோதி நின்றது. மினி லாரி இடித்த வேகத்தில் மரிய ராஜேந்திரன் காரை நிறுத்தினார். அப்போது அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அலறியபடித்து ஓடினர். இதனால் அரைமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சம்பவம் குறித்து மரிய ராஜேந்திரன் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் மினி லாரி டிரைவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.