பெருமாள் கோயிலில் வரலட்சுமி பூஜை

10-08-2019 12:05 AM

தக்கலை:

தக்கலை பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது..

தக்கலை பெருமாள் கோயிலில் நடந்த விரதபூஜையில் தக்கலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட ஊர்களிலிருந்தும் ஆலய ராகுகால துர்கா பூஜை, திருவிளக்கு மகளிர் குழுக்கள், சமய வகுப்பு ஆசிரியைகள் கலந்து கொண்டனர்,  ஆலயக் குழுவினர்  வாழையிலையில் அட்சதை, குங்குமம், உதிர்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கினர். பூஜையை நெட்டாங்கோடு  சாரதா ஆசிரம தலைவி யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி குத்துவிளக்கு ஏற்றி நடத்தினார்.  பஜனை நடந்தது. ஏற்பாடுகளை தக்கலை பெருமாள் கோயில் இந்து சகோதர இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.