தொடர் மழையால் படகு சேவை தாமதம்

10-08-2019 12:04 AM

கன்னியாகுமரி,:

கன்னியாகுமரியில் நேற்று காலை பெய்த தொடர் மழை காரணமாக படகு சேவை தாமதமாக துவங்கியது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது.நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.மழையால் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.  காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை ஒன்றரை மணிநேரம் காலதாமதமாக துவங்கியது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள் வேகமாக நிரம்பிவருகிறது.