நின்­று­கொண்­டி­ருந்த லாரி மீது கார் மோதி 3 பேர் பலி, 3 பேர் படு­கா­யம்

12-07-2019 01:29 AM


எட்­ட­ய­பு­ரம்:

எட்­டை­ய­பு­ரம் அருகே நின்று கொண்­டி­ருந்த கண்­டெய்­னர் லாரி மீது கார் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தில் காரில் பய­ணம் செய்த 3 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். 3 பேர் படு­கா­ய­ம­டைந்த­னர்.

விரு­து­ந­கர் மாவட்­டம் அருப்­புக்­கோட்டை பாளை­யம்­பட்டி மணி­ந­கரை சேர்ந்த வீரா­சாமி மனைவி ராஜம்­மாள்(55), நாயக்­கர் நடுத்­தெ­ரு­வைச் சேர்ந்த   ராம்­மோ­கன்(56), சண்­மு­க­வேல் நகர் ராம­சாமி மனைவி சரோஜா(47),  செல்­வ­லட்­சுமி(59), கண்­ணன் மகன்­கள் சுமன்(24),ராஜ்­கு­மார்(17) ஆகிய  6 பேரும் தங்­க­ளது உற­வி­ன­ரின் திரு­மண நிகழ்ச்­சி­யில் கலந்து கொள்­வ­தற்­காக கோவில்­பட்டிக்கு காரில் சென்­றுள்­ள­னர். காரை சுகன் ஓட்டினார். கார் எட்­ட­ய­பு­ரம் அருகே மதுரை துாத்­துக்­குடி தேசிய நெடுஞ்­சா­லை­யில் துரை­சா­மி­பு­ரம் அரு­கில் சென்ற போது கோவை­யில் இருந்து துாத்­துக்­கு­டிக்கு செல்­வ­தற்­காக சாலை ஓரத்­தில் நின்று கொண்­டி­ருந்த கண்­டெய்­னர் லாரி மீது கார் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

விபத்­தில்  காரில் பய­ணம் செய்த ராஜம்­மாள் , சரோஜா, ராஜா­ராம் ஆகி­யோர் சம்­பவ இடத்­தி­லேயே நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். செல்­வ­லட்­சுமி, ராஜ்­கு­மார் மற்­றும் டிரைவர் சுகன் ஆகி­யோ­ர் பலத்த காய­ம­டைந்­த­னர்.

விபத்து குறித்து தக­வல் அறிந்த எட்­ட­ய­பு­ரம் இன்ஸ்­பெக்­டர் வன­சுந்­தர், போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து சென்று காய­ம­டைந்­த­வர்­களை மீட்டு சிகிச்­சைக்­காக எட்­ட­ய­பு­ரம் அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் முத­லு­தவி செய்து மேல் சிகிச்­சைக்­காக துாத்­துக்­குடி அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர். உயி­ரி­ழந்த  ராஜம்­மாள் , சரோஜா, ராஜா­ராம் ஆகி­யோர் உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக எட்­ட­ய­பு­ரம்­அ­ரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர். சம்­பவ இடத்தை துாத்­துக்­குடி மாவட்ட எஸ்­பி­அ­ருண் பால­கோ­பா­லன் பார்­வை­யிட்டு விசா­ரணை நடத்­தி­னார்.