துாத்­துக்­கு­டி­யில் பட்­டப்­ப­க­லில் கழுத்தை அறுத்து இளம்­பெண் கொடூ­ரக் கொலை

03-07-2019 01:17 AM


துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் கழுத்தை அறுத்து கொடூ­ர­மான முறை­யில் பெண் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

துாத்­துக்­குடி ராஜீவ்­ந­கரை சேர்ந்­த­வர் உல­கு­முத்து (65. இவ­ரது மகள் மாக­ராணி (29). இவ­ருக்­கும் துாத்­துக்­கு­டியை சேர்ந்த இன்­ஜி­னி­யர் நடேஷ் (36) என்­ப­வ­ருக்­கும் கடந்த ௨௦­௧­௩ம் ஆண்டு திரு­ம­ணம் நடந்­தது. 5 வய­தில் விம்­ரித் என்­கிற மகன் உள்­ளான்.  

நடேஷ் வெ ளிநாட்­டில் வேலை செய்து வந்­தார். கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு தான் துாத்­துக்­கு­டிக்கு வந்­தார். கல்­லா­மொ­ழி­யில் உள்ள தனி­யார் பவர் பிளாண்­டில் வேலை செய்து வரு­கி­றார்.

நேற்று காலை நடேஷ் வழக்­கம் போல் வேலைக்கு சென்று விட்­டார். விம்­ரித் பள்­ளிக்கு சென்று விட்­டான்.

தந்­தை­யி­டம் காய்­கறி வாங்கி வரச் சொல்­லி­விட்டு மகா­ராணி வீட்­டில் தனி­யாக இருந்­துள்­ளார். கடைக்கு சென்று விட்டு   வீட்­டிற்கு வந்த தந்தை அதிர்ச்­சி­ய­டைந்­தார்.

பெற்ற மகள் ரத்த வெ ள்ளத்­தில் துடி, துடித்து கொண்டு கழுத்­தில் வெட்டு, குத்து காயங்­க­ளு­டன் உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் வீட்­டின் வாசல் முன் கிடந்­ததை பார்த்த அல­றி­னார்.அக்­கம்­பக்­கத்­தில் உள்­ள­வர்­கள்  

உட­ன­டி­யாக அவரை துாத்­துக்­குடி அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்­ற­னர். ஆனால் செல்­லும் வழி­யில் மகா­ராணி இறந்து விட்­டார்.

தக­வல் கிடைத்­த­வு­டன் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருண்­பால கோபா­லன் அந்த வீட்­டிற்கு வந்து பார்­வை­யிட்டு விசா­ரணை நடத்­தி­னார்.

 ரூரல் டி.எஸ்.பி (பொ) பழ­னி­கு­மார், சிப்­காட் இன்ஸ்­பெக்­டர் தில்லை நாக­ரா­ஜன், சப்­இன்ஸ்­பெக்­டர் ஜீவ­மணி தர்­ம­ராஜ் ஆகி­யோர் சம்­பவ இடத்­தில் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

மோப்­ப­நாய் வர­வ­ழைக்­கப்­பட்­டது. அந்த பகு­தி­யில் உள்ள எஸ்.பி.எம். நகர் வரை­யில் ஓடிச் சென்று நின்­றது. யாரை­யும்   பிடிக்­க­வில்லை. கைரேகை நிபு­ணர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்டு அவர்­கள் பதிவு செய்­த­னர்.

போலீ­சா­ரின் முதல் கட்ட விசா­ர­ணை­யில் தகாத உற­வி­னால் இந்த கொலை நடந்­தி­ருக்­க­லாம் என்று தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இத­னால் அதன் அடிப்­ப­டை­யில் போலீ­சார் விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ள­னர். நடேஷ் வெ ளிநாட்­டில் வேலை செய்த போதே மகா­ராணி பக்­கத்து வீட்­டில் வசிக்­கும் இள­வ­ர­சன் என்ற வாலி­பர் அவர்­கள் வீட்­டிற்கு வந்து குடும்ப நண்­ப­ராக பழகி வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

நடேஷ் வந்த பிற­கும் அவ­ரது வீட்­டிற்­குள் சக­ஜ­மாக இளவரசன் வந்து சென்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

மகா­ராணி கொலைக்கு பின்­னர் இள­வ­ர­சன் தலை­ம­றை­வாகி விட்­ட­தாக போலீஸ் தரப்­பில் கூறப்­ப­டு­கி­றது. மகா­ராணி வீட்­டில் இருந்து இள­வ­ர­சன் வீட்­டிற்கு செல்­லும் வழி­யி­லும் ரத்­தக்­கறை இருந்­துள்­ளதை போலீ­சார் உறுதி செய்­துள்­ள­னர். இதனை தொடர்ந்து அவரை தேடும் பணி­  நடந்து வரு­கி­றது.  

 பட்­ட­ப­க­லில் இளம் பெண். கொடூர கொலை துாத்­துக்­குடி மாந­கர பகு­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.