விஜயநாராயணம் அருகே வாலிபர் திடீர் மாயம்

20-06-2019 08:09 AM

திருநெல்வேலி:

விஜயநாராயணம் அருகே மாயமான வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விஜயநாராயணம் அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் இசக்கி முத்து(31). இவர் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது தந்தை ராதாகிருஷ்ணன் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தனது மகனை கண்டுபிடித்து தரும்படி விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இசக்கி முத்துவை தேடிவருகின்றனர்.