பாளை.,யில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

20-06-2019 08:05 AM

திருநெல்வேலி:

பாளை.,யில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

பாளை.வண்ணார்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (56). ஆட்டோ டிரைவர். இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, கொசுவர்த்தி பொருத்தி வைத்துள்ளார். காற்று பலமாக வீசி வருவதால் கொசுவர்த்தியில் இருந்து தீ திடீரென குடிசையில் பிடித்தது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடிசையில் தீ மளமளவென எரியத்துவங்கியதால் பாளை.,தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பாளை.,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.