குற்றாலம் மெயின்அருவி பாறையை ஓட்டிய படி விழும் தண்ணீர்.

20-06-2019 08:01 AM

குற்றாலம்:

குற்றாலத்தில் பகல் நேரத்தில் மற்றும் காற்று மட்டுமே இருந்ததால் நேற்றும் அருவிகளின் தண்ணீர் வரத்து குறைய துவங்கியதால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குற்றாலத்தில் நடப்பு ஆண்டு சீசன் மழை சரிவர பெய்யததால் பகலில் கடும் வெயிலும், காற்று மட்டுமே நிலவி வருகிறது. மலை பகுதிகளில் மழை பெய்யாததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் பாறை ஓட்டியபடி நேற்று விழுந்தது. ஆண்கள் பகுதியில் சிறிதளவு தண்ணீரும், பெண்கள் பகுதியில் பாறையை ஓட்டியபடியே தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 2 பிரிவுகளில் சுமாராக தண்ணீர் விழுந்து வருவதை காண முடிகிறது.

பழைய குற்றாலத்திலும் தண்ணீர் பாறையை ஓட்டிய நிலையில் தண்ணீர் விழுந்தது. புலியருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட்டது. தொடர்ந்து சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் விழக்கூடிய தண்ணீரில் மட்டும் சுற்றுலா பயணிகள் நேற்று வரிசையில் நின்று குளிப்பதை காண முடிந்தது. சாரல் இல்லமால் தொடர்ந்த டல் அடித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருவதுடன், வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.