சேற்றில் சிக்கிய மாடு

20-06-2019 07:53 AM

சுரண்டை:

சுரண்டை அருகே நள்ளிரவில் குளத்தின் சேற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சுரண்டை அருகே உள்ள கீழப்பாவூர் நாகல்குளத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (60) பால்வியாபாரி. இவருடைய பெண் எருமை மாடு கீழப்பாவூர் பெரிய குளத்தில் மேய்ச்சலுக்காக சென்றபோது குளத்தில் உள்ள சுமார் 15அடி பள்ளத்தின் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுரண்டை தீயணைப்பு

நிலைய அதிகாரி ராஜாமணி தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர், ஏட்டு கணேசன், வீரர்கள் கோட்டைகுமார், வெள்ளபாண்டியன், உதயபிரகாஷ், ஆகியோருடன் விரைந்து சென்று சேற்றில் சிக்கிய எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள மாட்டை உயிருடன் மீட்ட சுரண்டை தீயணைப்பு துறை பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினார்