போஸ்ட் கார்டு தட்டுபாடு : பொதுமக்கள் அவதி

20-06-2019 07:51 AM

நாகர்கோவில்,:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களிடத்தில்  அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வரும் போஸ்ட் கார்டு  கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் சார் போஸ்ட் என்ற ஒரு வார்த்தை மூலம்  பட்டுவாடா செய்யப்பட்டு வரும் ஒரு துறையாக தபால் துறை இருந்து வருகிறது. நவீனமாக எவ்வளவு மாற்றங்கள் வந்து கொண்டிருந்தாலும் இன்றும் சார் போஸ்ட் என்ற வார்த்தை மூலம் தான் தபால்கள் பட்டுவாடா நடக்கிறது. தபால் துறையில் இன்றும் அனைத்து தரப்பினரும் அதிக அளவில்  வாங்கி பயன்படுத்தி வருவது போஸ்ட் கார்டை தான். நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புகள், சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் அறிவிப்புகளை போஸ்ட்  கார்டு மூலமே தெரியபடுத்தி வருகின்றனர். எனவே இது அதிக அளவில் மக்களுக்கு தேவைபட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் போஸ்ட் கார்டு கிடைக்காமல் தபால் நிலையங்கள் ஒவ்வொன்றாக அலைய வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். போஸ்ட் கார்டுகள் கிடைக்காமல் தங்களுக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை சரியாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் போஸ்ட் கார்டு  தட்டுபாடு இல்லாமல் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்க கூடிய வகையில்  துறை  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.