நகைக்கடையில் 1 கிலோ தங்கம் மாயம்

20-06-2019 07:50 AM

சென்னை:

சென்னை, ஆர்.கே. நகரில் நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,  தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ராம்லால் (வயது 42).  ஆர்கே நகர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘நேதாஜி நகர் பிரதான சாலையில், நகோடா என்ற பெயரில்,  நகை கடை நடத்தி வருகிறேன். சமீபத்தில், என் கடையில் நகைகளை சரிபார்த்தபோது ஒரு கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. எனது கடையில் உறவினர்கள் சிலர் வேலை பார்த்து வந்தனர், அவர்கள்தான் சிறுக, சிறுக நகையை திருடியிருக்கலாம் என தெரிகிறது’’ என குறிப்பிட்டிருந்தார். போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கடைக்குள் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.