சென்னை அடையாறில் தனியார் அனாதை ஆசிரம வாசலில் இருந்த மாதா சிலையின் கை துண்டிப்பு

20-06-2019 07:50 AM

சென்னை:

சென்னை அடையாறில் தனியார் அனாதை ஆசிரம வாசலில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அடையாறு, ராமச்சந்திரா ஆதித்தனார் சாலையில் தனியாருக்கு சொந்தமான அனாதை ஆசிரமம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆசிரமத்தில் சுமார் 35 அனாதை குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். ஆசிரமத்தின் முன்பக்கம்  உள்ள சுவரில் உள்ள நாலறை அடி உயரத்தில் மாதா சிலை கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7 மணியளவில் ஆசிரம ஊழியர்கள் வந்த பார்த்த போது மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. மாதாவின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆசிரம நிர்வாகிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அடையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ வேண்டுமென்றே மாதா சிலையை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.