மனைவியுடன் தகராறு: 2வது மாடியில் இருந்து கீழே குதித்து ஓட்டல் ஊழியர் தற்கொலை

20-06-2019 07:40 AM

சென்னை:

குடும்பப் பிரச்சினை காரணமாக ஓட்டல் ஊழியர் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, கோடம்பாக்கம் அழகிரிபுரத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். தனியார் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல மனைவியிடம் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, ரகுவரன் வீட்டை விட்டு வெளியேறினார். கோடம்பாக்கம் பாரதீஸ்வர் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். நண்பர் வீட்டின் இரண்டாவது மாடியில் நண்பரிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ரகுவரன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.