கட்­டட கான்ட்­ராக்­ட­ரை தாக்­கிய இருவர் கைது

19-06-2019 03:46 AM

திரு­நெல்­வேலி:

நெல்­லையில் கட்­டட கான்ட்­ராக்­டரை தாக்­கி­ய­தாக இரு தொழி­லா­­ளர்கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

புதுக்­கோட்டை மாவட்டம், ஆலங்­கு­டியைச் சேர்ந்­தவர் தியா­க­ராஜன்(40). இவர் நெல்லை டவுனில் கட்­டடம் கட்டும் பணியை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வரு­கிறார். சம்­ப­வத்­த­ன்று இவ­­ருக்கும், கட்­டடத் தொழி­லா­ளர்கள், ஆலங்­கு­டியைச் சேர்ந்த பிர­பா­கரன்(25), ராஜா(38) விற்கும் இடையே தக­ராறு ஏற்­பட்­டது. அப்­போது தியா­க­ராஜன் இரும்­புக்­கம்­பியால் தாக்­கப்­பட்­டார்.

இது­கு­றித்து அவர் நெல்லை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசா­ரணை நடத்தி, பிர­பா­கரன், ராஜாவை கைது செய்­த­னர்.