மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் : விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

19-06-2019 03:07 AM

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான  உதவி உபகரணங்கள் பெறுவதற்கு தகுதியான மாற்றுத் திறனாளிகள்  விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்கள் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் வாக்கர், சிறப்பு குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, முடநீக்கு சாதனங்கள் மற்றும் செயற்கை கால்கள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பேட்டரி சக்கர நாற்காலிக்கும், பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு  மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி மற்றும் பிரைல் வாட்ச்சும், காது கேளாத வாய்பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன காது கருவி போன்ற  உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் கன்னியாகுமரி மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம்,  கலெக்டர் அலுவலகம்,  நாகர்கோவில் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.