மழை காலத்தில் அவசர தேவைக்கு ஸ்பெஷல் டீம்

19-06-2019 03:07 AM

நாகர்கோவில்,:

 மழை காலங்களில் இரவு நேரங்களில் அவசர தேவைக்காக 16 பேர் கொண்ட குழுவினர்  நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காலங்களில்  இரவு நேரங்களில் ஏற்படும் அவசர தேவைக்காக ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். ஆணையர் சரவணகுமார் ஆலோசனைபடி ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டீமில் 2 குப்பை அள்ளும் ஆட்டோ, 2 டிரைவர்கள், 10 துப்புரவு பணியாளர்கள், 2 பிளம்பிங் பணியாளர்கள், ஒரு துப்புரவு மேற்பார்வையாளர், ஒரு துப்புரவு ஆய்வாளர் என 16 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளதாக நகர்நல அலுவலர் கிங்சால் தெரிவித்தார்.