திருவட்டார் ஏசி மெக்கானிக் வெளிநாட்டில் அடித்துக் கொலை: உறவினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு

19-06-2019 03:07 AM

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள ஏசி மெக்கானிக் வெளிநாட்டில்  அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச் சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் குற்க்குடி பகுதியை சேர்ந்தவர் பாபு (32). இவர் ஓமன் நாட்டில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தந்தை இல்லை தாய் ரெங்க பாய். உள்ளூரில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபு ஓமன் நாட்டிற்கு சென்றார். அங்கு ஏசி எமக்கானிக் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் வெளிநாட்டிற்கு சென்ற பின் இதுவரையிலும் ஊருக்கு வரவில்லை.  ஆனால் தாயாருக்கு மாதம் மாதம் செலவுக்காக மட்டும் பணம் அனுப்பி கொடுப்பதாகவும் தெரிகிறது. மீதம் பணத்தை தனது சேமிப்பில் வைப்பதாகவும் தெரிகிறது. இவர் ஓமன் நாட்டில் உள்ள லாலா மாவட்டத்தில் பனணிபுரிந்து வந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபு அங்குள்ள் ஒரு பாழடைந்த கட்டடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடனும் காணப்பட்டார்.  இதனால் பாபுவை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்றும் இதை செய்தது யார் என்றும் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பாபுவின் பாதுகாவலர் என்ற முறையில் முந்நூறு கி.மீ.  தொலைவில் உள்ள அருள் என்பவரை வரவழைந்து பாபு தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர் ஆனால் எந்த நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியபடுத்தவில்லை. ஆனால் பாபுவிடம் அதிக பணம் இருப்பதை தெரிந்து கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இது குறித்து மத்திய மாநில அரசுகள் தலையிட்டு கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்க முன்வர வேண்டும் என்றும், இறந்த பாபுவின் உடலை சொந்த ஊர் கொண்டு வர போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பாபுவின்  நண்பர் சொந்த ஊருக்கு வரும் போதும் பாபுவை ஊருக்கு அழைத்துள்ளார். அப்போது விசா இன்னும் சில மாதங்களில் முடியும். அப்போது புதுப்பித்துவிட்டு ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவரின் மரணம் தாயார் மற்றும் அப்பகுதிவாசியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியது