கன்னியாகுமரி ஜீரோ பாயின்டில் 125 அடிஉயர தேசிய கொடிகம்பம்

19-06-2019 03:04 AM

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் 125 அடிஉயர தேசிய கொடிகம்பத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியை அடையாளபடுத்தும் வகையில் நான்குவழிசாலை நிறைவடையும்  ( ஜீரோ பாயின்ட் ) பகுதியில் 125 அடிஉயரத்தில் விஜயகுமார் எம்பி யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேசிய கொடிகம்பம் அமையயுள்ளது. இதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய கொடிகம்பம், அதை சுற்றிலும் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 24 மணிநேரமும் ஒளிரும் வகையில் அதிநவீன விளக்குகள் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விஜயகுமார் எம்.பி., அடிக்கல் நாட்டினார். அகஸ்தீஸ்வரம் பஞ்., முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், கனகராஜன், நாகர்கோவில் வக்கீல் சங்கதலைவர் ராஜேஷ், கன்னியாகுமரி லாட்ஜ் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்