13 பேர் பலி­யான சம்­ப­வம்: துாத்­துக்­கு­டி­யில் இன்று நினை­வேந்­தல் கூட்­டம்

22-05-2019 09:37 AM

துாத்­துக்­குடி,:

துாத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக நடந்த போராட்­டத்­தில் போலீ­சார் நடத்­திய துப்­பாக்­கி­சூட்­டில் 13 பேர் பலி­யா­ன  சம்­ப­வம் நடந்து முடிந்து இன்­று­டன் ஓராண்டு நிறை­வு­பெற்­ற­தை­ய­டுத்து இன்று ஸ்டெர்­லைட் ஆலை எதிர்­பா­ளர்­கள் சார்­பில் நினை­வேந்­தல் கூட்­டம் நடக்­கி­றது. இதனை முன்­னிட்டு இன்று 2ஆயி­ரத்து 300 போலீ­சார் பாது­காப்பு பணிக்கு குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 துாத்­துக்­கு­டி­யில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்­லைட் எதிர்ப்பு கூட்­ட­மைப்­புக் குழு­வி­னர் சார்­பில் கலெக்­டர் அலு­வ­லக முற்­றுகை  போராட்­டம் நடத்­தி­னர்.

அதில் ஏரா­ள­மான பொது­மக்­கள் கலந்­து­கொண்­ட­னர். இந்­நி­லை­யில் போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி­யது.

இதை­ய­டுத்து நடந்த போலீஸ் தடி­யடி மற்­றும் துப்­பாக்கி சூட்­டில் 13 பேர் பலி­யா­யி­னர். இந்­த­சம்­ப­வம் நடந்து முடிந்து இன்­று­டன் ஓராண்டு நிறை­வு­பெ­று­கி­றது.  

இந்­நி­லை­யில் இறந்­தோ­ருக்­கான முத­லா­மாண்டு நினை­வேந்­தல் கூட்­டம் மதுரை ஐக்­கோர்ட் கிளை அனு­ம­தி­யு­டன் தெற்கு பீச் ரோட்­டில் உள்ள தனி­யார் ஹோட்­ட­லின் கூட்­ட­ரங்­கத்­தில் இன்று நடக்­கி­றது.

அசம்­பா­வி­தங்­களை தடுக்­கும் வகை­யில் ஸ்டெர்­லைட் எதிர்ப்பு கூட்­ட­மைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் உட்­பட சுமார் நுாற்­றுக்­கும் மேற்­பட்­டோர் மீது 107 சட்­டப்­பி­ரி­வின் கீழ் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

இது­த­விர துாத்­துக்­குடி மாந­க­ரில் அமைதி நில­விட பாது­காப்பு ஏற்­பா­டு­கள் குறித்து மதுரை தென்­மண்­டல ஐஜி., சண்­மு­க­ரா­ஜேஸ்­வ­ரன் தலை­மை­யில் துாத்­துக்­குடி மாவட்ட போலீஸ் அலு­வ­ல­கத்­தில் வைத்து அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை கூட்­டம் நடந்­தது.  

கூட்­டத்­திற்கு நெல்லை சரக டிஐஜி., கபில்­கு­மார் சரத்­கார் மற்­றும் மாவட்ட எஸ்பி., முர­ளி­ரம்பா ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.  

கூட்­டத்­தில் முத­லா­மாண்டு நினை­வேந்­தல் நிகழ்ச்­சி­யின் போது எந்­த­வித சிறிய அசம்­பா­வி­தம் ஏதும் நிக­ழா­மல் சிறந்த முறை­யில் பாது­காப்பு பணி­கள் மேற்­கொள்­வது குறித்து போலீஸ் அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை மற்­றும் அறி­வு­ரை­கள் வழங்­கி­னர்.

அன்­றைய தினம் பாது­காப்­புக்­காக விரு­து­ந­கர், சிவ­கங்கை, கன்­னி­யா­கு­மரி, மதுரை, ராம­நா­த­பு­ரம், தேனி, திண்­டுக்­கல், நெல்லை ஆகிய தென் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து கூடு­தல் போலீ­சார் பாது­காப்பு பணிக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

7 ஏடி­எஸ்பி.,க்கள், 28 டிஎஸ்பி.,க்கள், 103 இன்ஸ்­பெக்­டர்­கள் மற்­றும் 280 எஸ்ஐ.,க்கள் உட்­பட சுமார் 2300 போலீ­சார் மற்­றும் 6 கம்­பெனி தமிழ்­நாடு சிறப்பு போலீ­சா­ரும் பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர்.