தமி­ழ­கத்­தில் முதன்­மு­றை­யாக துாத்­துக்­கு­டி­யில் திரு­நங்கை திரு­ம­ணம் பதிவு

21-05-2019 09:43 AM

துாத்­துக்­குடி:

தமி­ழ­கத்­தில் முதன்­மு­றை­யாக துாத்­துக்­கு­டி­யில் திரு­நங்கை திரு­ம­ணத்தை பதிவு செய்­துள்­ள­னர்.

துாத்­துக்­குடி சங்­க­ரப்­பேரி ஹவு­சிங்­போர்டு கால­னி­யைச் சேர்ந்­த­வர் ஸ்ரீஜா. திரு­நங்­கை­யான இவ­ருக்­கும் அருண்­கு­மார் என்ற வாலி­ப­ருக்­கும் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 31ம் தேதி துாத்­துக்­குடி சங்­கர ராமேஸ்­வ­ரர் கோயி­லில்   இந்து முறைப்­படி திரு­ம­ணம் நடந்­தது.

  இத்­தி­ரு­ம­ணத்தை சட்­டப்­பூர்­வ­மாக பதிவு செய்­வ­தற்கு துாத்­துக்­குடி இணை சார் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­திற்கு சென்­ற­னர். ஆனால் தமிழ்­நாடு திரு­ம­ணப் பதிவு சட்­டத்­தின் கீழ் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­க­ளுக்­குள் திரு­ம­ணம் நடந்­தால் அதை சட்­டப்­பூர்­வ­மாக ஆன்­லைன் பதிவு செய்­வ­தற்கு அது­வரை தமி­ழக அரசு வழி­வகை எது­வும் செய்­யா­ம­லி­ருந்­தது.

  இதை­ய­டுத்து துாத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த வக்­கீல் ராஜேந்­தி­ரன் மூல­மாக துாத்­துக்­குடி மாவட்­டப் பதி­வா­ள­ரி­டம்(நிர்­வா­கம்) மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.  

இத்­தி­ரு­மண பதிவு சட்­டச் சிக்­கல்­கள் மற்­றும் ஆன்­லை­னில் உள்ள குள­று­ப­டி­கள் கார­ண­மாக சென்னை ஐக்­கோர்ட் கிளை­யில் வழக்கு தொடர்ந்­த­னர். நீதி­பதி சுவா­மி­நா­தன் முன்­னி­லை­யில் நடந்த வழக்கு விசா­ர­ணை­யில் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தீர்ப்பை வழங்­கி­னார்.

அதன் அடிப்­ப­டை­யில் தமி­ழ­கத்­தி­லேயே முதன் முறை­யாக துாத்­துக்­குடி சார் பதி­வா­ள­ரால் திரு­நங்கை ஸ்ரீஜா மற்­றும் வாலி­பர் அருண்­கு­மார் இரு­வ­ருக்­கும் சட்­டப்­பூர்­வ­மாக ஆன்­லை­னில் திரு­ம­ணம் பதிவு செய்­துள்­ள­னர்.

மூன்­றாம் பாலி­னத்­த­வ­ருக்­கும் திரு­ம­ணம், தத்­தெ­டுப்பு அதி­கா­ரம் போன்ற அனைத்து உரி­மை­க­ளும் உள்­ளன என்­பதை இத்­தி­ரு­ம­ணம் உறுதி செய்­துள்­ளது.

  திரு­மண ஏற்­பா­டு­களை தமிழ்­நாடு பத்­தி­ரம் எழு­தும் சங்­கத்­தின் மாநில இணைச் செய­லா­ளர் கண்­ணன்(எ)சிவ­சங்­கர ராமன், சமூக ஆர்­வ­லர் முரு­கன் உட்­பட பலர் செய்­தி­ருந்­த­னர்.