துாத்துக்குடியில் நாளை நினைவேந்தல் கூட்டம் : 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு

21-05-2019 09:43 AM

துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் நாளை ( 22ம் தேதி)  போலீஸ் துப்­பாக்கிச் சூட்­டில் இறந்­தோ­ருக்­கான நினை­வேந்­தல் கூட்­டம் நடக்­க­வுள்­ளது. அதில் அசம்­பா­வி­தம் ஏற்­ப­டா­மல் தடுக்க நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் மீது போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

துாத்­துக்­கு­டி­யில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரி­வித்து நடந்த கலெக்­டர் அலு­வ­லக முற்­றுகை போராட்­டத்­தில் வன்­முறை வெடித்­தது.

இதை­ய­டுத்து போலீ­சார் நடத்­திய துப்­பாக்கிச் சூடு மற்­றும் தடி­ய­டி­யில் 13 பேர் பலி­யா­யி­னர். அச்­சம்­ப­வம் நடந்து ஓராண்டு நிறை­வ­டை­ய­வுள்ள நிலை­யில் இறந்­த­வர்­க­ளுக்­கான நினை­வேந்­தல் கூட்­டம் நடத்த மாவட்ட போலீ­சா­ரி­டம் ஸ்டெர்­லைட் எதிர்ப்பு கூட்­ட­மைப்பு குழு­வி­னர் அனு­மதி கோரி­னர்.

அதற்கு போலீ­சார் மறுப்பு தெரி­வித்­து­விட்­ட­னர். இதை­தொ­டர்ந்து மதுரை ஐகோர்ட் கிளை­யில் அவர்­கள் மனுத்­தாக்­கல் செய்­த­னர்.

மனுவை விசா­ரித்த நீதி­ப­தி­கள் ஒரு சில நிபந்­த­னை­க­ளு­டன் நினை­வேந்­தல் கூட்­டத்­திற்கு அனு­மதி அளித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து பீச் ரோடு தனி­யார் ஓட்­டல் கூட்­ட­ரங்­கில்   மெழு­கு­வர்த்தி தீபம் ஏந்தி அமை­தி­யான முறை­யில் நினை­வேந்­தல் கூட்­டம் நடக்­கும் என்று பொறுப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

  இதற்­கி­டையே மாவட்ட எஸ்பி., முர­ளி­ரம்பா தலை­மை­யில் விசைப்­ப­டகு மீன­வர்­கள், சங்­குக்­கு­ளி­யல் சங்­கத்தை சேர்ந்­த­வர்­கள் மற்­றும் ஊர் சமு­தாய முக்­கி­யஸ்­தர்­க­ளு­டன் ஆலோ­சனை கூட்­டம் நடந்­தது.

கூட்­டத்­தில் துாத்­துக்­குடி சப்­க­லெக்­டர் சிப்­ரன்­ஜித்­சிங் பேசி­னார். ஏடி­எஸ்பி.,க்கள் வேத­ரத்­தி­னம், பொன்­ராமு ஆகி­யோர் சிறப்பு அழைப்­பா­ளர்­க­ளாக கலந்­து­கொண்­ட­னர்.

துாத்­துக்­குடி டவுன் டிஎஸ்பி., பிர­காஷ் முன்­னிலை வகித்­தார். துாத்­துக்­குடி டவுன் போலீஸ் இன்ஸ்­பெக்­டர்­கள் முறையே வட­பா­கம் பார்த்­தீ­பன், மத்­தி­ய­பா­கம் ஜெயப்­பி­ர­காஷ், முத்­தை­யா­பு­ரம் சிவ செந்­தில்­கு­மார், தெர்­மல்­ந­கர் ரஞ்­சித்­கு­மார், தென்­பா­கம் ஜீன்­கு­மார் உட்­பட இன்ஸ்­பெக்­டர்­க­ளும், எஸ்ஐ.,க்களும் கலந்­து­கொண்­ட­னர்.

  மே 22ம் தேதி அசம்­பா­வி­தங்­களை தடுக்­கும் வகை­யில் ஏற்­க­னவே ஸ்டெர்­லைட் எதிர்ப்பு போராட்­டத்­தில் நடந்த வன்­முறை சம்­ப­வங்­கள் தொடர்­பான வழக்­கு­க­ளில் தொடர்­பு­டைய நபர்­கள் மீது போலீ­சார் 107, 110 ஆகிய சட்­டப்­பி­ரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.