வாலி­பால் போட்டி: சென்னை, மதுரை, துாத்­துக்­குடி அணி­கள் சாம்­பி­யன்

21-05-2019 09:42 AM

எட்­ட­ய­பு­ரம்,:

எட்­ட­ய­பு­ரம் அருகே படர்ந்­த­பு­ளி­யில் லியா கைப்­பந்து கழ­கம் சார்­பில் கனரா வங்கி சுழல் கோப்­பைக்­கான 16 வது ஆண்டு மாநில அள­வி­லான ஆண்­கள் மற்­றும் பெண்­க­ளுக்­கான மின்­னொளி வாலி­பால் போட்­டி­கள் இரண்டு நாட்­கள் நடந்­தது.

எட்­ட­ய­பு­ரம் படர்ந்­த­புளி லியா கிளப் மைதா­னத்­தில் நடை­பெற்ற 16 வது மாநில அள­வி­லான மின்­னொளி கைப்­பந்து போட்­டி­க­ளுக்கு கோவில்­பட்டி தொழி­ல­தி­பர் சண்­மு­க­வேல் தலைமை வகித்­தார்.

 துாத்­துக்­குடி.மாவட்ட கைப்­பந்து கழக தலை­வர் ஜான் வசீ­க­ரன், கைப்­பந்து கழக மாவட்ட செய­லா­ளர் ரமேஷ்­கு­மார், மாவட்ட விளை­யாட்டு அலு­வ­லர் தீர்த்­தோஸ் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர். விளை­யாட்டு போட்­டிக்கு சிறப்பு அழைப்­பா­ளர்­க­ளாக எட்­ட­ய­பு­ரம் திருப்­பதி கேஸ் பியூல்  சர்­வீஸ் உரி­மை­யா­ளர் சீனி­வா­சன், கனரா வங்கி துாத்­துக்­குடி மண்­டல உதவி பொது மேலா­ளர் காந்தி, கோவில்­பட்டி சேர்ந்த டாக்­டர் விஜய் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.    

பக­லி­ரவு போட்­டி­க­ளாக 2 நாள்­கள் நடை­பெற்ற விளை­யாட்டு போட்­டி­களை எட்­ட­ய­பு­ரம் தாசில்­தார் வத­னாள் துவக்கி வைத்­தார்.

துாத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில், மதுரை, ராம­நா­த­ம­பு­ரம், கோவை, திருப்­பூர் உள்­ளிட்ட தமி­ழ­கத்­தின்  பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மான அணி வீரர்­கள் கலந்து கொண்­ட­னர்.

ஆண்­கள், பெண்­கள் மற்­றும் பள்ளி மாண­வர்­கள் என 3 பிரி­வு­க­ளாக நடந்த போட்­டி­க­ளில் ஆண்­கள் பிரி­வில் 28 அணி­க­ளும், பெண்­கள் பிரி­வில் 8 அணி­க­ளும், பள்ளி மாண­வர்­கள் பிரி­வில் 13 அணி வீரர்­கள் பங்­கேற்று விளை­யா­டி­னர்.

நாக் அவுட் முறை­யில் நடை­பெற்ற இந்த போட்­டி­யில் ஆண்­கள் இறுதி போட்­டி­யில் சென்னை அணி­யும், துாத்­துக்­குடி அணி­யும் மோதி­யது.

இதில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்­பி­யன் பட்­டம் பெற்று முதல் பரி­சான ரு.16016 ம்,  இரண்­டா­மி­டம் பெற்ற துாத்­துக்­குடி அணிக்கு ரு.12016 பரி­சுத்­தொ­கை­யும் வழங்­கப்­பட்­டது.

பெண்­கள் பிரி­வில் இறுதி போட்­டி­யில் மதுரை மற்­றும் கோவில்­பட்டி அணி­கள் மோதி­யது.

இதில் மதுரை அணி­யி­னர்  வெற்றி பெற்று  சாம்­பி­யன் பட்­ட­மும் ரு.7016 பரி­சுத்­தொ­கை­யும்,  இரண்­டா­மி­டம் பெற்ற கோவில்­பட்டி அணி­யி­ன­ருக்கு பரிசு தொகை­யாக ரு.5016 ம் வழங்­கப்­பட்­டது.

பள்ளி மாண­வர்­கள் பிரி­வில் இறுதி போட்­டி­யில் துாத்­துக்­குடி கார்­டு­வெல் பள்ளி அணி­யும். தரு­வை­கு­ளம் அரசு மேல் நிலைப்­பள்ளி அணி­யும் மோதி­யது. இதில் கார்­டு­வெல் பள்ளி அணி வெற்றி பெற்­றது.

எட்­ட­ய­பு­ரம் கனரா வங்கி மேலா­ளர் ஆரோக்­கிய விஜி கோல்டா சோபியா, கோவில்­பட்டி கனரா வங்கி மேலா­ளர் பிர­பா­க­ரன், படர்ந்­தப்­புளி கனரா வங்கி மேலா­ளர் செந்­தூர்­பாண்­டி­யன், எழுத்­தா­ளர் இளசை மணி­யன், ஆசி­ரி­யர் நல்­லையா உள்­ளிட்ட ஏரா­ள­மா­ன­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.

போட்டி ஏற்­பா­டு­களை லியா கைப்­பந்து கழக நிறு­வ­னர் லிங்­க­வன் உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் செய்­தி­ருந்­த­னர்.