அகில இந்­திய ஹாக்கி லீக் போட்டி சென்னை சாய், கர்­நா­டகா கூர்க் அணி­கள் வெற்றி

21-05-2019 09:41 AM

கோவில்­பட்டி:

கோவில்­பட்­டி­யில் நேற்று நடந்த அகில இந்­திய அள­வி­லான ஹாக்­கிப்­போட்டி லீக் ஆட்­டத்­தில்   சென்னை சாய் அணி, கர்­நா­டகா   கூர்க் அணி வெற்றி பெற்­றது

கோவில்­பட்டி, கே.ஆர்.மருத்­து­வம் மற்­றும் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் சார்­பில், கே.ஆர்.கல்வி நிறு­வ­னங்­கள், லட்­சுமி அம்­மாள் ஸ்போர்ட்ஸ் அகா­ட­மி­யு­டன் இணைந்து நடத்­தும் 11ம் ஆண்டு லட்­சுமி அம்­மாள் நினைவு சுழற் கோப்­பைக்­கான அகில இந்­திய ஹாக்­கிப் போட்­டி­கள் கடந்த16ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை கோவில்­பட்டி செயற்கை புல்­வெளி மைதா­னத்­தில் பகல் இரவு ஆட்­ட­மாக நடந்­து­வ­ரு­கி­றது..

போட்­டி­யின் 5வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு நடை­பெற்ற 13வது லீக் ஆட்­டத்­தில் சென்னை சாய் அணி­யு­டன் சென்னை இந்­தி­யன் வங்கி அணி மோதி­யது.

இதில் 3:2 என்ற கோல் கணக்­கில் சென்னை சாய் அணி வெற்றி பெற்­றது. ராஜ்­கு­மார் ஜா மற்­றும்   கீர்த்தி முத்­தப்பா ஆகி­யோர் நடு­வர்­க­ளாக செயல்­பட்­ட­னர்.

 மாலை 4.30 மணிக்கு நடந்த 14வது லீக் ஆட்­டத்­தில் புனே   ஹாக்கி அணி­யு­டன் கர்­நா­டகா ஹாக்கி கூர்க் அணி   மோதி­யது இதில் 2;1 என்ற கோல் கணக்­கில் கர்­நா­டகா ஹாக்கி கூர்க் அணி வெற்றி பெற்­றது. இப்­போட்­டிக்கு அமித் ஷையினி   மல்­ஹைட் சிங் ஆகி­யோர் நடு­வர்­க­ளாக செயல்­பட்­ட­னர். 

மாலை. 6.15 மணிக்கு நடந்த 15வது லீக் ஆட்­டத்­தில் மும்பை யூனி­யன் வங்கி அணி­யு­டன் டில்லி நேஷ­னல் ஹாக்கி அகா­டமி அணி மோதி­யது. இதில் 1:1 என்ற கோல் கணக்­கில் மும்பை யூனி­யன் வங்கி அணி­யும் டில்லி நேஷ­னல் ஹாக்கி அகா­டமி அணி­யும் சம­நி­லைப் பெற்­றது.

 அதைத்­தொ­டர்ந்து இரவு 8 மணிக்கு நடந்த 16வது லீக் ஆட்­டத்­தில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட்  ரயில்வே அணி­யு­டன் சென்னை தமிழ்­நாடு போலீஸ் அணி மோதி­யது. இதில் ௩:௧ என்ற கோல்கணக்கில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட்  ரயில்வே அணி­ வெற்றி பெற்றது.

இன்று காலை 6.30 மணிக்கு நடக்­கும் போட்­டி­யில் மும்பை கஸ்­ட­மஸ் அணி­யும், சென்னை சாய்­அ­ணி­யும் மோது­கி­றது.

மாலை4.30 மணிக்­கும் நடக்­கும் போட்­டி­யில் சண்­டி­கர் சிஐ­எஸ்­எப் அணி­யும் தமிழ்­நாடு போலீஸ் அணி­யும் மோது­கி­றது. மாலை 6.15 மணிக்கு நடக்­கும் போட்­டி­யில் செகந்­தி­ரா­பாத் சவுத் சென்ட்­ரல் ரயில்வே அணி­யும், புனே பிஇஜி ஹாக்கி அணி­யும் மோது­கி­றது.

அதைத்­தொ­டர்ந்து இரவு 8 மணிக்கு நடக்­கும் போட்­டி­யில் புவ­னேஸ்­வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணி­யும், பெங்­க­ளூரு கனரா வங்கி அணி­யும் மோது­கி­றது.