கோவில்­பட்­டி­யில் அ.இ.ஹாக்­கிப்­போட்டி: மும்பை யூனி­யன் வங்கி அணி வெற்றி !

20-05-2019 12:19 AM

கோவில்­பட்டி.:

கோவில்­பட்டி, கே.ஆர்.மருத்­து­வம் மற்­றும் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் சார்­பில், கே.ஆர்.கல்வி நிறு­வ­னங்­கள், லட்­சுமி அம்­மாள் ஸ்போர்ட்ஸ் அகா­ட­மி­யு­டன் இணைந்து நடத்­தும் 11வது ஆண்டு லட்­சுமி அம்­மாள் நினைவு சுழற் கோப்­பைக்­கான அகில இந்­திய ஹாக்­கிப் போட்­டி­கள் கடந்த16ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை கோவில்­பட்டி செயற்கை புல் வெளி மைதா­னத்­தில் பகல் இரவு ஆட்­ட­மாக மின்­னொ­ளி­யில் நடை­பெற்று வரு­கி­றது.  

நேற்று நடந்த10வது லீக் ஆட்­டத்­தில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணி­யும் சண்­டி­கர் சிஐ­எஸ்­எப் அணி  மோதி­யது.

இதில் 2:2 என்ற கோல் கணக்­கில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணி­யும் சண்­டி­கர் சிஐ­எஸ்­எப் அணி­யும் சம­நி­லைப் பெற்­றது. 

3-வது நிமி­டத்­தில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணி வீரர் அனு­ராக் குஜூர் ஒரு பீல்டு கோல் போட்­டார்.   

6-வது நிமி­டத்­தில் சண்­டி­கர் சிஐ­எஸ்­எப் அணி வீரர் இபுன்கோ ஒரு பீல்டு கோல் போட்­டார்.  

26-வது நிமி­டத்­தில் புவ­னேஷ்­வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணி வீரர் வெல்­ஷாம் மினிஷ் ஒரு பீல்டு கோல் போட்­டார்.  

34-வது நிமி­டத்­தில் சண்­டி­கர் சிஐ­எஸ்­எப் அணி வீரர் நிதின் சர்மா ஒரு பீல்டு கோல் போட்­டார்.    

கீர்த்தி முத்­தப்பா   சுரேஷ்­கு­ம­ரர் ஆகி­யோர் நடு­வர்­க­ளாக செயல்­பட்­ட­னர்.  தொடர்ந்து நடந்த 11வது லீக் ஆட்­டத்­தில் மும்பை யூனி­யன் வங்கி அணி­யு­டன் கோவில்­பட்டி லட்­சுமி அம்­மாள் ஸ்போர்ட்ஸ் அகா­டமி அணி மோதி­யது. இதில் .5;0என்ற கோல்­க­ணக்­கில் மும்பை யூனி­யன் வங்கி வெற்­றி­பெற்­றது.

ய 12வது லீக் ஆட்­டத்­தில் பெங்­க­ளூரு ஹாக்கி அசோ­சி­யே­ஷன் அணி­யு­டன் மும்பை ஆல் இந்­தியா கஸ்­டம்ஸ் அணி மோதி­யது.

இன்று காலை நடை­பெ­றும் போட்­டி­யில் சென்னை சாய் அணி­யும், இந்­தி­யன்­வங்கி அணி­யும் மோது­கி­றது. மாலை 4.30 மணி நடக்­கும் போட்­டி­யில் புனே பிஇஜி, சென்­டர் கிர்கீ ஹாக்கி அணி­யும், கர்­நா­டாகா ஹாக்கி கூர்க் அணி­யும் மோது­கி­றது.

மாலை6.15 மணிக்கு நடக்­கும் போட்­டி­யில் மும்பை யூனி­யன் வங்கி அணி­யும், டில்லி நேஷ­னல் ஹாக்கி அகா­டமி அணி­யும் மோது­கி­றது. இரவு 8 மணிக்கு நடக்­கும் போட்­டி­யில் புவ­னேஸ்­வர் ஈஸ்ட்­கோஸ்ட் அணி­யும் சென்னை தமிழ்­நா­டு­போ­லீஸ் அணி­யும் மோது­கி­றது.