கோவில்­பட்­டி­யில் பேரா­சி­ரி­யரை கடத்தி தாக்கி நகை, பணம் பறிப்பு: 4 பேர் கைது

19-05-2019 12:52 PM

கோவில்­பட்டி:

கோவில்­பட்­டி­யில் வெளி­நாட்­டில் வேலை பார்த்து வரும் பேரா­சி­ரி­யரை கடத்தி அவரை தாக்கி தங்க நகை மற்­றும் பணத்தை பறித்து சென்ற   4  பேரை போலீ­சார்  கைது செய்­த­னர். மேலும் இவ்­வ­ழக்­கில் தொடர்­பு­டைய 6 பேரை தேடி வரு­கின்­ற­னர்.

 கோவில்­பட்­டியை அடுத்த கீழப்­பாண்­ட­வர்­மங்­க­லம் வடக்கு தெருவை சேர்ந்த கோயில்­பிள்ளை மகன் ஜெய­கு­மார் (53). வெளி­நாட்­டில் பேரா­சி­ரி­ய­ராக வேலை செய்து வரும் இவ­ருக்கு சொந்­த­மான சொத்­துக்­களை கடந்த மாதம் ரூ.27 லட்­சத்­திற்கு விற்­பனை செய்­துள்­ளார்.

அதற்கு கோவில்­பட்டி மேட்டு தெரு பார­தி­ந­கரை சேர்ந்த வெள்­ளைச்­சாமி மகன் கவி­ய­ர­சன் தனக்கு ரூ.5 லட்­சம் கொடுக்க வேண்­டும் என கூறி மிரட்டி வந்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இரு­வ­ருக்­கும் இடையே முன்­பகை இருந்து வந்­துள்­ளது. இந்­நி­லை­யில்  சண்­மு­க­சி­கா­மணி நகர் பிள்­ளை­யார் கோயில் அருகே நின்று கொண்­டி­ருந்த ஜெய­கு­மாரை கவி­ய­ர­சன், அவ­ரது சகோ­த­ரர் அமிர்­த­ராஜ் உள்­பட 10 பேர் கவி­ய­ர­ச­னுக்கு சொந்­த­மான காரில்  கடத்தி சென்று, அவ­ரி­ட­மி­ருந்த ரூ.42,500, 2  தங்­க­மோ­தி­ரங்­கள், 3 பவுன் தங்­கச்­செ­யின் ஆகி­ய­வற்றை பறித்­து­விட்டு, ஜெய­கு­மா­ரின் வீட்­டிற்கு அவரை அழைத்து வந்து வீட்­டில் இருந்த 6  காசோலை, ஏ.டி.எம். கார்டு, பேங்க் பாஸ்­புக் மற்­றும் பத்­தி­ரம், 2 புரோ­நோட் மற்­றும் 5 வெள்ளை பேப்­பர்­க­ளில் கையெ­ழுத்து வாங்கி கொண்டு அவரை அரி­வாள் மற்­றும் கத்­தி­யால் தாக்­கி­விட்டு  சென்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.

காய­ம­டைந்த ஜெய­கு­மார் கோவில்­பட்டி அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் சிகிச்சை பெற்­றார். இது­கு­றித்து அவர் அளித்த புகா­ரின் பேரில், மேற்கு  போலீ­சார்  வழக்கு பதிவு செய்து,  செல்­லப்­பாண்டி நகரை சேர்ந்த ராஜ் மகன் ராதா­கி­ருஷ்­ணன் என்ற ராதா(20), கீழப்­பாண்­ட­வர்­மங்­க­லம் நடு தெருவை சேர்ந்த விஸ்­வ­நா­த­மூர்த்தி மகன் பொன்­சந்­தோஷ்­கு­மார்(18), பல்­லக்கு ரோட்டை சேர்ந்த மாத­வன் மகன் தாமஸ்(24) மற்­றும் 17 வயது சிறு­வன் ஆகிய 4 பேரை­யும் கைது செய்­த­னர்.

மேலும், இவ்­வ­ழக்­கில் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­ப­டும் கவி­ய­ர­சன், அமிர்­த­ராஜ் உள்­பட 6  பேரை­யும் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட காரை­யும் போலீ­சார் தேடி வரு­கி­றார்­கள்.