கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: திருநாவுக்கரசர் பேட்டி

19-10-2018 01:18 PM

மதுரை

கமல்ஹாசனைப் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். முதல்வரை எவ்வாறு சிபிஐ விசாரணை செய்ய முடியும்?. எனவே முதல்வர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும்.

ராகுல் காந்தியை கமல் சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக கூறியுள்ளார்.

கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு. அரசியலில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பழைய படத்தை அமைச்சர் தற்போது தான் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு, திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.