சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு

26-04-2018 05:25 PM

மதுரை,

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் அருள்மிகு கள்ளழகர் 30ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் எழுந்தருளுகிறார்.
இந்த சித்திரை விழாவை முன்னிட்டு வைகையாற்றில் 27ம் தேதி (நாளை) முதல் 30ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்ததுள்ளா்.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு சுமார்  216 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.