logo

கேள்வி: intha penuku enna thissai nadakuthu. eppothu thirumanam seialam, future life eppadi irukum. sonthathil thirumanam seialama.

M.SATHYA

பதில்:

லக்னம் –  துலாம்

ராசி –   விருச்சிகம்

நட்சத்திரம் – கேட்டை 4ம் பாதம்


தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சுக்கிரன் திசையில் வியாழன் புத்தி 20-07-2021 வரை உள்ளது. 

இந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு 5ல் கேது இருப்பது சர்ப்பதோஷம் குழந்தை பாக்யம் கிடைக்க காலதாமதமாகும். இருந்தாலும் விநாயகர் கோயில் அரசமரத்தடி கல்லில் நாகர்சிலை இருக்கும் அதற்கு அபிஷேகம் செய்து தூப, தீப ஆராதனை காட்டி, தீபாரதனை அவர் கையால் காட்ட வேண்டும். அரசமரத்தை மூன்று முறை வலம் வந்து விநாயகரை வழிபட்டு சிதறுகாய் உடைத்துவிட்டு வந்தால் தோஷத்திற்கு பரிகாரமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண வாய்ப்பு வரும். செவ்வாய் தோஷம் கிடையாது. தோஷம் இல்லாத ஜாதகம் பார்க்கவும். குரு, கேது சேர்க்கை சிறப்பு. எதிர்காலம் வளமாக இருக்கும். வெள்ளிக்கிழமை விநாயகர், மகலெட்சுமி வழிபாடு , வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யச் சொல்லுங்கள். சிரமங்களுக்குப் பரிகாரமாகும். குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும்

கேள்வி: திருமணம் காலதாமதம் ஆகிறது எப்போது திருமணம் நடக்கும்

சங்கர்

பதில்:

லக்னம் –  ரிஷ பம்

ராசி –   மகரம்

நட்சத்திரம் – திருவோணம் 1ம் பாதம்

தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது வியாழன் திசையில் சந்திர புத்தி 07-03-2020 வரை உள்ளது. தங்களுக்கு லக்னப்படி, ராசிப்படி கடினமான செவ்வாய் தோஷம் உள்ளது. அதேபோல் 7ல் ராகு சார்ப்ப தோஷம் உள்ளது. மேலும் மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பத்தில் உள்ளது. கண்டிப்பாக நீங்கள் காளஹஸ்தி சென்று தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். அதேபோல் வரன் பார்க்கும் பொழுது இதேபோன்று தோஷம் உள்ள ஜாதகத்தையே பார்க்க வேண்டும் மார்ச் மாதத்திற்கு பிறகு குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு வருகிறது. அப்பொழுது திருமண வாய்ப்பு வரும். குருதிசை என்பதால் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள் தடை நீங்கும்.

கேள்வி: En neram ipo epadi iruku...manakstama iruku...health problem ah iruku..

Vaishnavi

பதில்:

லக்னம் –  விருச்சிகம்

ராசி –   சிம்மம்

நட்சத்திரம் – பூரம் 1ம் பாதம்


தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்போது சந்திரன் திசையில் ராகு புத்தி 14-8-2020 வரை உள்ளது.

செவ்வாய் புத்திஆகஸ்ட் மாதம் துவங்கும்பொழுது உங்களுக்கு தேக ஆரோக்யம் முன்னேற்றமாகும். ராசிக்கு ஐந்தில்ராகு இருப்பதால் தோஷம் உள்ளது. அதனால்தான் தேக ஆரோக்கயம் குறைவு.

அடுத்து வரும்செவ்வாய் புத்தி லக்கினாதிபன் என்பதால் குறைபாடு நீங்கி தேக ஆரோக்யம் முன்னேற்றமாகும்.இருந்தாலும் செவ்வாய், கேது சேர்க்கை எட்டில் இருப்பதால் விநாயகர் கோயில் அரசமரத்தடிநாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி, தீப, தூப ஆராதனை காட்டி வழிபடுங்கள்.இதற்கு வெள்ளிக்கிழமை உத்தமம்.

செவ்வாய் கிழமைராகு காலத்தில் மதியம் 3:00 மணி முதலம் 4:30 மணி வரை துர்க்கையம்மனுக்கு எலுமிச்சைவிளக்கில் நெய் தீபம் ஏற்றி, துர்க்காஷ்டம் படிக்கலாம். தேக ஆரோக்கியத்தில்முன்னேற்றம் ஏற்படும்.

கேள்வி: நான் தந்தையின் தொழில்லை செய்து வருகிறேன். கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றன். எப்பொது சிக்கல் தீரும்.

வீ.மணிரத்னம்

பதில்:

லக்னம் –  மிதுனம் 

ராசி –   மீனம்

நட்சத்திரம் – ரேவதி 2ம் பாதம்


தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சுக்கிர திசையில் ராகு புத்தி 24-04-2020 வரை உள்ளது. தங்கள் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது. 2020 மார்ச் மாதம் 24ம் தேதிக்கு பிறகு உங்கள் கடன் சுமை குறையும். லாபகரமான விஷயம் வரும். ஆனாலும் கொடுக்கல் வாங்கலில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி ஜாமின் கொடுக்க வேண்டும். தொழில் முன்னேற்றம் வரும்.

ஆனாலும் கொடுக்கல் வாங்கலில் யாரையும் நம்பி ஜாமின் கொடுக்க வேண்டாம் சிக்கல் வரும். திட்டமிட்டு செயல்படுங்கள் தொழில் முன்னேற்றம் வரும்.

சுக்கிர திசை என்பதால் வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு மகாலெட்சுமி வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் சிரமங்கள் விலகும். கோயில் தெப்பக்குளத்தில் இருக்கும் மீன்களுக்கு பொரி இரை போடுங்கள் உங்கள் குறை நீங்கும். 

கேள்வி: Ennaku eppothu thirumanam nadakum doosam ullatha

Lakshmi

பதில்:

லக்னம் –  மேஷம்

ராசி –   சிம்மம்

நட்சத்திரம் – பூரம் 2ம் பாதம்


தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு செவ்வாய் திசையில் கேது புத்தி 01-06-2020 வரை உள்ளது. தங்கள்  ராசிக்கு 7ல் செவ்வாய், ராகு இருப்பதால் செவ்வாய் தோஷம் சர்ப்ப தோஷம் இரண்டும் உள்ளது. எனவே நீங்கள் வரன் பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை பார்ப்பது உத்தமம். உங்களுக்கு இப்பொழுது வியாழ நோக்கு உள்ளது. இந்த ஆண்டு டிசமபர் மாதத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் திருமண வாய்ப்பு வரும். இருந்தாலும் நீங்கள் செவ்வாய்கிழமை ராகு காலத்தில் மதியம் 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் உங்கள் சார்பில் வீட்டில் யாராவது இதை போய் செய்யலாம். அல்லது நீங்களே கோயிலுக்குப் போய் செய்யலாம்.  அதே போல் வெள்ளிக்கிழமை அரசமர்த்தடி விநாயகர் இருக்கும் கல் நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து தண்ணீர், பால், தேன், தயிர் ஆகிய அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி பொட்டு, பூ வைத்து தங்கள் கையில் தூப, திபாஅராதனை செய்துவிட்டு கோயிலை மூன்று சுற்று சுற்றிவிட்டு விநாயகரை கும்பிட்டு ஒரு சிதறு தேங்காய் உடையுங்கள். சர்ப்ப தோஷம் பரிகாரமாகும்.

கேள்வி: நான் இன்று வரை எந்த வேலையும் கிடைக்காமல் கடன் சுமையால் அவதி படுகிறேன்.சமீபகாலமாக உடல் நிலையும் சரி இல்லை.நான் காலை 10:20 கு பிறந்தேன்.

Infant Vijay

பதில்:

லக்னம் –  மேஷம்

ராசி –    துலாம்

நட்சத்திரம் – ஸ்வாதி 3ம் பாதம்


தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது நடப்பு சனி திசையில் செவ்வாய் புத்தி 04-11-2020 வரை உள்ளது. 

தங்கள் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும், லக்னம், ராசி உள்பட அனைத்தும் ராகு, கேதுவிற்குள் அடக்கமாகியுள்ளது. இது காலசர்ப்ப தோஷம் முற்பகுதி கஷ்டம் சிரமங்கள் தான் அதிகமிருக்கும். 35 வயதுக்கு மேல்தான் இந்த தோஷம் யோகமாகும். அத்துடன் லக்னத்திற்கு பத்துக்குடைய தொழில் ஸ்தான அதிபது சனி - எட்டாமிடத்தில் இருப்பது கொடுக்கும். உங்களுக்கு தற்பொழுது சனிதிசை என்பதால் சனிக்கிழமை தோறும் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் காளஹஸ்தி கோயில் ஒருமுறை சென்று வாருங்கள். காலசர்ப்ப தோஷத்திற்கு பரிகாரமாகும். தினமும் காக்கைக்கு காலை ஏதாவது அன்னமிடுங்கள் உங்கள் கடன் தொல்லை நீங்கும்.

கேள்வி: ஐயா கடமையாக உழைத்தும் சரியான ஊதியம் இல்லை, நிறுவனத்திற்கும், மற்ற கம்பெனிகளுக்கும் எனது உழைப்பின் மூலம் நிறைய வருவாய் ஈட்டியுள்ளேன். ஆனால் புதியதாக வருபவர்கள் அதற்கான பலனை அடைகின்றனா். நியாயமான ஊதியம் கேட்டால் தட்டி கழிக்கின்றனா்...எப்போது விடிவுகாலம் பிறக்கும்? சொந்த தொழில் செய்யலாமா? ஐயா...

Veerakumar Rajesh

பதில்:

லக்னம் –   கன்னி

ராசி –    மிதுனம்

நட்சத்திரம் – திருவாதிரை 2ம் பாதம்

தங்கள் ஜாதகப்படி நடப்பு சனி திசையில் சுக்கிர புத்தி 28-3-2023 வரை உள்ளது. வியாழணைத் தவிர அனைத்து கிரகங்களும், லக்னம், ராசி எல்லாம் ராகு, கேதுவுக்குள் இருப்பதால் கிட்டதட்ட காலசர்ப்பதோஷ அமைப்பு தான் அதனால் தான் ஊருக்கு மணக்கும் தாழம்பூ. இருந்தாலும் உச்ச சனி திசை என்பதால் சுயமுன்னேற்றம் நன்றாக இருக்கும். சுக்ர புத்தி சுமாராக இருக்கும். சூரிய புத்தி சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இறையருள் அதிகம் உண்டு கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு கடமையை செய்யுங்கள். சூழ்நிலைமாறும் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்குச் சென்று பாலாஜி வழிபாடு செய்யுங்கள் இது சனிதிசை சிறப்பு சேர்க்கும் செவ்வாய்கிழமை தோறும் மதியம் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்கள் குறை நீங்கி நிறையாகும். தினமும் காக்கைக்கு ஏதாவது உண்பதற்கு கொடுங்கள் சிரமங்கள் குறையும். திட்டமிட்டு செயல்படுங்கள் உத்தமம்

கேள்வி: naan nimmathi yae illama irukae enaku velai kediachum tripthi illa enaku ellam amainjum ennala use pannika mudiyala en valkai kadaisi vara ipdiyae poidum nu bayama iruku eppo enaku naan ninaichuthu nadakkum??

Ranjith

பதில்:

லக்கினம்: சிம்மம்

ராசி: விருச்சிகம்

நட்சத்திரம்: அனுஷம்3ம் பாதம்

தங்கள் ஜாதகப்படிதங்களுக்கு தற்போது புதன் திசையில் சனி புத்தி 23.9.2020 ஆண்டு வரை உள்ளது.

லக்னத்தில் செவ்வாய்– சூரியனும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் – சிறப்பு.

எல்லாம் இருக்கும்,எல்லாம் கிடைக்கும். ஆனால் 8இல் சனி, கேது சேர்க்கை உங்களுக்கு காரியத் தடை, மனக் குழப்பம்,வீண் பயம் இவற்றைத் தரும்.

மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள். நெகடிவ் சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். எல்லாம் நன்மைக்கே என்றபாசிடிவ் சிந்தனையோடு இருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

தினமும் விநாயகர்வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக மன நிம்மதி கிட்டும்.நினைத்த காரியம் கைகூடும்.

கேள்வி: ஐயா வணக்கம், ராசி : மகரம், லக்னம்:மேஷம், நட்சத்திரம்:அவிட்டம், ஐயா எப்பொழுது எனக்கு அரசாங்க வேலை மற்றும் திருமணம் அமையும்.

வடிவேல் ராவணன்

பதில்:

லக்கினம்: துலாம்

ராசி: மகரம்

நட்சத்திரம்: திருவோணம்3ம் பாதம்

தங்கள் ஜாதகப்படிதங்களுக்கு தற்போது குரு திசையில் குரு புத்தி 27.7.2020 வரை உள்ளது.

தங்களுக்கு அரசுபணி கிடைக்கும். ஆனால் குரு திசையில் சுய புத்தி முடிய வேண்டும். அதன் பிறகு வேலை கிடைப்பதற்குவாய்ப்பு உண்டு.

தங்களுக்கு ராசிப்படிசெவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளது. திருமண வாய்ப்பு தாமதமாகும்.

சர்ப்ப தோஷமும்உள்ளது.

எனவே, அடுத்த ஆண்டுமார்ச் மாதம் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு முயற்சி செய்யுங்கள். திருமணம் கைகூடும்.ஆனால் வது பார்க்கும்போது செவ்வாய் தோஷம் உள்ள வதுவைப் பார்ப்பது உத்தமம்.

வியாழக்கிழமை தோறும்தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

தற்போது ஏழரை சனிஆரம்ப கட்டம். அடுத்து ஜென்மத்திற்கு வரும். எனவே சனிக்கிழமைதோறும் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். தினமும் காக்கைக்கு உணவு, பலகாரம் உண்ண வைப்பது ஏழரை சனியின்சிரமத்தைக் குறைக்கும்

 

கேள்வி: When will get marry and pls tell me about my marriage life.

Tharmaraj S

பதில்:

லக்கினம்: கன்னி

ராசி: விருச்சிகம்

நட்சத்திரம்: கேட்டை3ம் பாதம்

தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்போது சுக்கிர திசையில் புதன் புத்தி 26.01.2021 வரை உள்ளது

தங்கள் ஜாதகத்தில் ராசிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது.

லக்னத்திற்கு5ஆம் இடத்தில் ராகு இருப்பதால் சர்ப்பதோஷம் உள்ளது. ஆகவே, திருமணம் தாமதப்பட்டுள்ளது.

உங்களுக்கு வதுபார்க்கும்பொழுது இதே போல் செவ்வாய் தோஷம் உள்ள வதுவைப் பார்ப்பது உத்தமம்.

2020ஆம் ஆண்டுமார்ச் மாதம் 24ம் தேதிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமண வாய்ப்புவரும்.

திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு, ஸ்ரீமகாலெட்சுமி வழிபாடு செய்யுங்கள். உங்கள் குறை நீங்கும்.வாழ்வில் வளம் பெருகும்.

ஏழரை சனி முடிவதால்,நவகிரகம் சுற்றி, சனீஸ்வரனுக்கு எள் தீபம் போட்டு வழிபடுங்கள். இதை சனிக்கிழமை செய்வதுஉத்தமம்.

Previous
Next