சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது KXIP அணி

05-05-2019 05:56 PM

மொகாலி,

ஐபிஎல் டி 20 பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என பஞ்சாப் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த சீசனில் மோசமான ஃபார்மில் உள்ள வாட்சன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு டு பிளெசிஸ், ரெய்னா ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தது. அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ரன் ரேட்டையும் கட்டுக்குள் வைத்து விளையாடினர்.
டு பிளெசிஸ் தனது 37-வது பந்தில் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து, முருகன் அஸ்வின் ஓவரில் பவுண்டரி அடித்த ரெய்னா தனது 34-வது பந்தில் அரைசதம் அடித்தார். இந்த பாட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து சென்றது. அரைசதம் அடித்த பிறகு டு பிளெசிஸ் டாப் கியருக்கு மாறி ரன் குவிக்க தொடங்கினார். இதனால் சென்னை அணியின் ரன் ரேட் ஓவருக்கு 8-ஐ கடந்து சென்றது.
53 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, தோனி களமிறங்கினார்.
சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து மிரட்டி வந்த டு பிளெசிஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 96 ரன்கள் எடுத்திருந்த போது சாம்கரனின் அற்புதமான யார்க்கரில் போல்டானார். அவர் 55 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 96 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரையும் ஷமி சிறப்பாக வீசினார். இதனால், அந்த ஓவரில் அம்பதி ராயுடு மற்றும் ஜாதவ் ஆட்டமிழந்தனர்.

தோணி 10 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இதைத்தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 18 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கொண்டது.

பஞ்சாப் அணியில் கே.எல். ராகுல் அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 71(36) ரன்களில் ஆட்டமிழந்தார். 

கிரிஸ் கெயில் 28(28) ரன்களும், மயங்க் அகர்வால் 7(6) ரன்களும் எடுத்து ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினர். அடுத்ததாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 36(22) ரன்களில் வெளியேறினார்.
சாம் குர்ரன் 6(7) ரன்களும், மந்தீப் சிங் 11(9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

முடிவில் பஞ்சாப் அணி 18 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.