ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்

27-04-2019 07:56 PM

ஜெய்ப்பூர்,

   ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று இரவு 8:00 மணிக்கு ஆட்டத்தை தொடங்கியது.

ஐ.பி.எல். போட்டியில் 45 வது ‘லீக்’ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்  நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

2 அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.