ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

25-03-2019 08:19 PM

ஜெய்ப்பூர்: 

   2019ம் ஆண்டு 12-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸ் ஐதராபாத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 37 ரன்னில் மும்பை இந்தியன்சையும் தோற்கடித்தன.

4-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.