ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

23-03-2019 07:50 PM

சென்னை,

   2019ம் ஆண்டு 12-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

தொடக்க லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதுகின்றான. முதல் போட்டியே சென்னையில் நடைபெறுவதால், அதிகளவில் ரசிகர்கள் சேப்பாக்கத்தில் மாலையிலிருந்தே திரண்டனர். மைதானத்தின் முக்கிய வாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

சென்னையில் தொடங்கியுள்ள 12-வது ஐ.பி.எல். போட்டியில் பெங்களுருவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்துவிக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது

பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதித்தது.